புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கே தெரியாமல் 100 பவுன் நகையை தூக்கிய இன்ஸ்பெக்டர்... மதுரையில் அதிர்ச்சி

Update: 2024-08-29 10:04 GMT

மதுரையில் புகார் அளிக்க வந்த பெண்ணின் நகைகளை அடகு வைத்து திரும்ப ஒப்படைக்காத பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் - அபிநயாவுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மோதல் ஏற்பட்டதால் அதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்தனர். இதனை ஆய்வாளர் கீதா விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணத்தின்போது பெற்றோர் கொடுத்த நகைகளை ராஜேஷ்குமாரிடம் இருந்து வாங்கித்தருமாறு அபிநயா கூறியதால், 100 பவுன் நகைகளை ஆய்வாளர் கீதாவிடம் ராஜேஷ்குமார் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல் ஆய்வாளர் கீதா காலம் தாழ்த்தியதால், திருமங்கலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது, நகைகளை ஆய்வாளர் கீதா தனியார் நிதி நிறுவனத்தில் 43 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்தது தெரியவந்தது. இதில் 20 பவுன் நகைகளை கீதா திரும்பக் கொடுத்ததாக கூறப்படும் நிலையில், டிஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு, கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனினும், மீதமுள்ள 38 பவுன் தங்க நகைகளை ஒப்படைக்காததால், டிஐஜி உத்தரவின்பேரில் கீதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்