கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி, கணினி வாயிலான சப் ஜெயிலர் தேர்வை டி.என்.பி.எஸ்.சி நடத்தியது. இதில் நன்றாக தேர்வு எழுதியும், தங்களுக்கு குறைந்த மதிப்பெண்களே கிடைத்துள்ளது என கமுதியைச் சேர்ந்த அசோக் குமார், முருகன், விக்னேஷ் குமார் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தேர்வில் குளறுபடிகள் நடந்திருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகவும், தங்களது விடைத்தாள்களின் நகலை, டிஎன்பிஎஸ்சி வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், அவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, மனுதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள், அவர்களது விடைத்தாள் நகல்களை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.