கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்த அரசுப் பேருந்து ஓட்டுநர்...விரக்தியில் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவி - த*கொலைக்கு முன் ஓட்டுநர் பேசி வெளியிட்ட வீடியோ வைரல்
கடன் பிரச்சனையில் மனைவி விவாகரத்து கேட்டதால், அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகேயுள்ள பாறைப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். அரசு பேருந்து ஓட்டுநரான இவர், கடன் பிரச்சினையில் சிக்கியதாகவும்.. இதனால் வெங்கடேசனுக்கும் அவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தொடர் குடும்ப தகராறால் விரக்தியடைந்த வெங்கடேசனின் மனைவி வசந்தி, விவாகரத்து கேட்டு வெங்கடேசனுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன் செல்போனில் வீடியோ வெளியிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட விடியோ இணையத்தில் பரவி சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.