மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் வைகை ஆற்றுக்குள் கொட்டப்பட்டிருந்த கொப்பைகளில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும், கரும்புகை பரவியது. இதனையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியமே, இந்த தீவிபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.