எல்லையில் கணவன்... ஆத்திரத்தில் அண்ணண்... சடலமாக கிடந்த பெண்... மதுரையை அதிர வைத்த கொடூரம்

Update: 2024-08-07 13:19 GMT

திருமணமான ஆண் நண்பருடன் தகாத உறவு வைத்திருந்த தங்கையை சொந்த அண்ணனே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகர் கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் திலகவதி. 36 வயதான இவருக்கு ராணுவத்தில் பணிபுரிந்த கண்ணன் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திலகவதிக்கு ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த திருமணமான ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது கள்ளக்காதல் விவகாகரம் கணவனுக்கு தெரிந்ததால் அவர் கண்டித்துள்ளார். தொடர்ந்து, அவர் விவாகரத்து கோர முடிவு செய்ததால் இந்த விவகாரம் திலகவதியின் அண்ணன் தமிழ்ராஜூக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தங்கையை பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளார். வீட்டுக்கு வந்த அவரிடம் கள்ளக்காதலை கைவிடக்கோரி அண்ணன் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த தமிழ்ராஜ் தங்கை என்றும் பாராமல் கொலை செய்தார். தொடர்ந்து, அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு கீரைத்துறை காவல்நிலையத்தில் சரணடைந்தார். விரைந்து வந்த போலீசார் திலகவதியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் தங்கை கொலை செய்யப்பட்டநிலையில், அண்ணனும் ஜெயிலுக்கு சென்றதால் இரண்டு குடும்பமும் நிற்கதியாகி இருப்பது சோகத்தை ஏறபடுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்