அண்ணன் மனைவியை தீர்த்து கட்டிய கொழுந்தன் -வெளியான திடுக்கிடும் தகவல் -மதுரையில் அதிர்ச்சி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அர்கேயுள்ள முத்தையன்பட்டி காலனியை சேர்ந்த சகோதரர்கள் பெருமாள் மற்றும் பாண்டி. இருவருக்கும் திருமணமான நிலையில், இருவரது குடும்பத்திற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், சம்பவத்தன்று அண்ணனின் வீட்டிற்கு தகராறு செய்த பாண்டி, வீட்டில் இருந்த அண்ணனின் மனைவி பஞ்சம்மாளை கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.