``மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம்..'' முஸ்லிம் கணவர் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
இஸ்லாமிய திருமண முறிவு சட்டத்தில் விவாகரத்து வழக்கு முடியும் வரை மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என தனி சட்ட பிரிவு இல்லாவிட்டாலும், அரசியலமைப்பு உரிமையின்படி மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனைவி மற்றும் குழந்தைக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க ஊட்டி குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளத