"கோவையில் 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்?" பகீர் கிளப்பிய அ.மலை... பின்னணி என்ன..?

Update: 2024-04-21 05:24 GMT

கோவையில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதாக பரவிய செய்தி தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

vovt

இதன்படி, கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30 லட்சத்து 81 ஆயிரத்து 594 வாக்காளர்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் போதும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களின் முன்னிலையிலேயே வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சிறப்பு சுருக்குமுறை திருத்தத்தின் போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்டவை நடைபெறும் எனவும், இப்பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்கு சாவடி நிலை முகவர்களையும் ஈடுபடுத்தியே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்