பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு விவகாரம் - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Update: 2024-05-13 14:52 GMT

தேர்தல் நடத்தை விதிகளை மீறி, வெறுப்பு பேச்சு ஈடுபட்டதாக பிரதமர் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லியை சேர்ந்த ஷாஹீன் அப்துல்லா தாக்கல் செய்த மனுவில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் தேர்தல் பரப்புரையின்போது பிரதமர நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர், தேர்தல் பரப்புரையின்போதும் வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்துக்கு அளித்த புகார்கள் கிடப்பில் உள்ளதாகவும், எனவே, பிரதமர் மோடி உள்ளிடடோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா, அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்