"இது மக்களை தண்டிப்பது .." முடிந்தது தேர்தல்... ECIக்கு திமுக MP திடீர் கடிதம்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
வாக்குப்பதிவு முடிந்த மாநிலங்களில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், புதிய கொள்கைகளை வகுத்தல், ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பணிகளை தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜூன் 4 வரை மாநில அரசின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது உரிய காரணங்கள் ஏதுமின்றி ஜனநாயகத்தை முடக்குவது மற்றும் மக்களை தண்டிப்பது போன்றதாகும் என்று கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் மாநிலத்திற்குள் 50 ஆயிரத்திற்கு மேல் மக்கள் பணம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும், இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளைத் தொடரும் முடிவானது மிகவும் தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றதாகத் தோன்றுகிறது என கூறியுள்ளார். எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.