சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம்! மொத்தமாக நாமத்தை போட்ட உரிமையாளர்! கிருஷ்ணகிரியில் பரபரப்பு சம்பவம்

Update: 2023-10-28 09:08 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் தங்கராஜ் என்பவரது மகன் ராபர்ட் மற்றும் அவரது மனைவி வனிதா ஆகியோர் ஏபிஆர் பைனான்ஸ் மற்றும் நிறுவனங்கள் சிலவற்றை நடத்தி வந்தனர். தீபாவளியை முன்னிட்டு பரிசுப் பொருட்கள் வழங்குவதாக அறிவித்த நிலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 150 ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரையிலான பரிசுத் திட்டங்களுக்கு தவணைகளை செலுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ஏபிஆர் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் வேன், கண்டெய்னர் லாரி, டெம்போ உள்ளிட்டவைகள் மூலமாக இரவோடு இரவாக எடுத்துச் செல்வதாக தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஏபிஆர் சூப்பர் மார்க்கெட் முன்பு குவிந்து மேனேஜர் மற்றும் ஊழியர்களை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்