800 ரூபாயால் பறிபோன உயிர் - சாலையில் நின்று கதறிய மனைவி - தர்மபுரியில் பரபரப்பு | Dharmapuri

Update: 2023-08-09 03:42 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது

முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், அரூரில் பைனான்ஸ் நடத்தி வரும் நல்லதம்பியிடம், கடந்த 2022ம் ஆண்டு 3 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை சங்கர் கொடுத்து விட்ட நிலையில், வட்டி பணம் 800 ரூபாயை கொடுக்கவில்லை என தெரிகிறது. இது குறித்து நல்லதம்பி சங்கர் வீட்டுக்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மன வேதனையில் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தற்கொலைக்கு காரணமான நல்லதம்பியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினருடன் வாக்குவாதம் முற்றி, தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்