குமரியில் கல்லூரி விடுதியில் ஊசி போட்டு மாணவி தற்கொலை சிக்கிய கடிதம்..வெளியான அதிர்ச்சி தகவல்
குமரி மாவட்டம், குலசேகரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில், முதுநிலை மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் மகன் சுகிர்தா, மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரிக்குச் செல்லாமல் விடுதி அறையில் தங்கியிருந்த அவர், மன அழுத்தம் காரணமாக, ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவருடைய அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில், தனது முடிவிற்கு 3 பேராசிரியர்கள் காரணம் என்று எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குலசேகர காவல் நிலைய போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.