"லஞ்ச ஒழிப்புத் துறை கொடுத்த லெட்டர்..." அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு | ADMK | ED Raid
சத்யா, எம்எல்ஏவாக பதவி வகித்த காலத்தில், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக அவரது பெயரிலும், அவரது குடும்பத்தினரின் பெயரிலும் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவருடைய உறவினர்கள் மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக, சென்னையில் அவருடைய வீடு மற்றும் அலுவலகங்கள் என 19 இடங்களிலும், கோயம்பத்தூரில் 2 இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலுல் இந்த சோதனை நடைபெற்றது. மொத்தம் 22 இடங்களில் நடைபெற்ற சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த சோதனைக்குப் பிறகு, 2 பைகளில் ஆவணங்களையும், பிரிண்டர் எந்திரத்தையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் கூறிய சத்தியா, தனது சொத்து விவரங்களை சரியாக கணக்கு காண்பித்துள்ளதாக கூறினார்.