தமிழகத்திலேயே முதன்முறையாக.. நாளை காலை 9.15 AM.. வரலாற்றை மாற்றி எழுதும் பெண்கள்

Update: 2024-09-05 08:10 GMT

தமிழகத்தில் முதன்முறையாக பெண்களே யாகபூஜைகள் நடத்தி தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் நடத்த உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் இந்திரா நகரில் உள்ள சித்தர்களின் தலைவி ஆதிசக்தி ஞானபீடம் மற்றும் பதினெண் சித்தர்கள், விநாயகர், முருகர் உட்பட திருமேனிகளின் மகா கும்பாபிஷேக விழா நாளை காலை 9.15 மணியில் இருந்து 10.15 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்கான முதல் கால யாக பூஜைகளை தமிழில் மந்திரங்கள் ஓதி பெண்களே நடத்தினர். நான்கு கால யாக சாலை பூஜைகளும் தமிழ் மந்திரங்கள் ஓதி பெண்களே நடத்துகின்றனர். இது மட்டுமின்றி பெண்களே குடமுழுக்கு செய்கின்றனர். உழவுத் தொழிலை குறிக்கும் விதமாக பச்சை ஆடை உடுத்தி பெண்கள் கோயிலின் கருவறைக்கு சென்று தெய்வ திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் சித்தர் முறைப்படியும், சித்தர் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்