Work Form Home IT ஊழியர் செய்த குலை நடுங்கவிடும் சம்பவம்...ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சிறுமி

Update: 2024-07-30 05:03 GMT

Work Form Home IT ஊழியர்

செய்த குலை நடுங்கவிடும் சம்பவம்

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சிறுமி

அரக்க மகனுக்கு துணை நின்ற தாய்?

பெரும் பேசு பொருளாகி நாமக்கலை குழப்பத்தில் மூழ்கடித்த பரபரப்பு விவகாரத்தில், இறுதியில் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். இதன் முழுப் பின்னணி குறித்து இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம் விரிவாக..

கடந்த 3 நாட்களாகவே நாமக்கலை பரபரப்பில் தகிக்கச் செய்து கொண்டிருக்கிறது இந்த சம்பவம்...

நாமக்கல் மாவட்டம் சக்தி நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்...

எம்சிஏ பட்டதாரியான இவர், பெங்களூருவில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்....

அதிக சத்தங்களை தொடர்ந்து கேட்டதால் இவர் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக இரண்டு ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது...

இதனிடையே, work form home முறையில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்திருக்கிறார் செந்தில்குமார்...

இந்நிலையில், பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், செந்தில் குமாரின் வீட்டில் அவரின் தம்பி மகன்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது...

அப்போது, குழந்தைகள் அனைவரும் சத்தம் போட்டு விளையாடியதால் செந்தில்குமார் ஆத்திரமடைந்ததாகவும் கூறப்படுகிறது...

இதில், 10 வயது சிறுமியை பிடித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிய செந்தில்குமார், சிறுமியை காப்பாற்ற வந்த அவரின் உறவினர்களையும் சேர்த்து தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது....

படுகாயமடைந்த சிறுமி உட்பட மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தொடர்ந்து செந்தில்குமாரை பிடித்து தங்களின் கண்காணிப்பில் வைத்து விசாரணையும் நடத்தி வந்தனர்...

இளைஞர் உண்மையிலே மன நலம் பாதிக்கப்பட்டிருந்தாரா?... என்ற கோணத்தில் அவர் இதுவரை மேற்கொண்ட சிகிச்சை குறித்தான விவரங்களை கேட்டுப்பெற்று போலீசாரின் விசாரணை நீண்டது....

இதனிடையே, செந்தில்குமார் மன நலம் பாதிக்கப்பட்டவர் இல்லை எனவும், சம்பந்தப்பட்ட சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், பெற்றோரிடம் தெரிவிக்க முயன்ற சிறுமியை அவர் அரிவாளால் தாக்கியதாக உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்...

தொடர்ந்து, மன நலம் பாதிக்கப்பட்டதை காரணமாக முன்வைத்து இளைஞரை தப்ப விடக்கூடாது எனக்கூறி சிறுமியின் உறவினர்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் குமாரமங்கலத்தில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்....

இவ்வாறு, பதற்றத்தில் தொடங்கி... நாமக்கல்லை தொடர்ந்து பரபரப்பில் வைத்திருந்தது இந்த சம்பவம்...

தொடர்ந்து பெரும் பேசு பொருளும் ஆனது...

இந்நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், செந்தில்குமார் மற்றும் அவரின் தாயை... கொலை முயற்சி, குற்றத்தை மறைத்தது என 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்திருக்கின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில், இளைஞர் உண்மையிலே மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றால் அவரை சிறையில் அடைத்திருக்க வாய்ப்பில்லை... இந்நிலையில், இந்த சிறை நடவடிக்கை இளைஞரை குற்றவாளியாக காட்டி இருக்கிறதோ என்ற கேள்வியும் எழும் நிலையில், விவகாரம் முற்றுப் பெறவில்லை இனிதான் தொடர்கிறது என்கின்றனர் சிலர்...

Tags:    

மேலும் செய்திகள்