அலுவலக அறையில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் செய்த செயல் .. வைரல் வீடியோ
கிருஷ்ணகிரி மாவட்டம் எக்கூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில், துணைத் தலைவர் மது அருந்தும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவரான கார்த்திகேயன், அலுவலக அறையில் மது அருந்தி அட்டகாசம் செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் மது அருந்திய படியே சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக கார்த்திகேயனை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயற்சித்தபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை..