ஊரையே குலைநடுங்கவிட்ட சத்தம் கதறும் குழந்தைகள் - மக்கள் எடுத்த திடீர் முடிவு

Update: 2024-09-01 11:17 GMT

கொத்தூர் கிராமத்தில் 8 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லி கிரஷர் செயல்பட்டு வருகிறது. பயங்கர சத்தத்துடன் வெடி வைப்பதால், குழந்தைகள் குழந்தைகள் பயப்படுவதாகவும், இதுவரை சுமார் 75க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், கிரஷருக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பர்கூர் வட்டாட்சியர் திருமுருகன் கிரஷர் உரிமையாளர்களிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்