ஒரு ரூபாய் காசு கூட செலவு இல்ல ஹைடெக் பள்ளியில் பிள்ளைகள் - வாய் பிளக்கும் தனியார் பள்ளிகள்

Update: 2024-09-28 07:38 GMT

ஒரு ரூபாய் காசு கூட செலவு இல்ல

ஹைடெக் பள்ளியில் பிள்ளைகள்

வாய் பிளக்கும் தனியார் பள்ளிகள்

கணினி, அபாகஸ் பயிற்சி, சிலம்பம், சதுரங்கம், இசை, நடனம்.. எல்லாமே ஃப்ரீ கிளாஸ்

கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அசத்தி வருகிறது ஒரு அரசுப்பள்ளி... இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

தனியார் பள்ளிகள் மட்டுமே தரமான கல்வி தருவதாக கருதப்படும் இந்தக் கால கட்டத்தில் அதைத் தவிடு பொடியாக்கியுள்ளது கிருஷ்ணகிரி கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி...

1962ல் தொடங்கப்பட்ட இந்த பள்ளி... கடந்த 5 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் வீரமணியின் தலைமையின் கீழ் பயணித்து வருகிறது...

கல்வித்துறை, உள்ளாட்சித்துறை, உள்ளூர் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பள்ளியின் உள்கட்டமைப்பு, கல்வித்தரம் மற்றும் திறமைகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன...

பிளாஸ்டிக் இல்லாத வளாகம்...வண்ணமயமான வகுப்பறைகள்...தனி நூலகம்...கணினி வகுப்பறை...என கலக்குகிறது இந்த அரசுப்பள்ளி...கணினி பயிற்சி, அபாகஸ் பயிற்சி, சிலம்பம், சதுரங்கம், இசை, நடனம், கையெழுத்துப் பயிற்சி, ஸ்போக்கன் இங்க்லீஷ் என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன...

அன்பாசிரியர் விருது, மாநில எழுத்தறிவு விருது, சிறந்த பள்ளி மேலாண்மைக் குழு விருது, கல்வி வள்ளல் காமராசர் விருது, பசுமை முதன்மையாளர் விருது, மாநில நல்லாசிரியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளது இந்த அரசுப்பள்ளி...அரசுப் பள்ளிகளுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழும் கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன...

Tags:    

மேலும் செய்திகள்