சொத்து கேட்டு அடம் பிடித்த மகனுக்கு மறக்க முடியா தண்டனை கொடுத்த அப்பா...அலறிய மக்கள்

Update: 2024-09-11 10:28 GMT

சொத்து கேட்டு அடம்பிடித்த மகனுக்கு மறக்க முடியா தண்டனை கொடுத்த அப்பா அலறிய மக்கள்..ரத்த வெள்ளத்தில் மனைவி

சொத்தை தன் பெயரில் எழுதி கொடுக்குமாறு கேட்ட மகனுக்கு, தந்தையால் நேர்ந்திருக்கும் சம்பவம் கோவில்பட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

கோவில்பட்டி பேருந்துநிலையத்தில், பட்டப்பகலில் அரிவாளுக்கு இரையாக பார்த்து நூலிழையில் உயிர் தப்பி இருக்கின்றனர் இந்த தாயும், மகனும்...

மனைவியையும், மகனையும்... ஒருவர், பேருந்து நிலையத்தில் வைத்து ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியிருக்கும் இந்த சம்பவம் கோவில்பட்டியை அதிரச் செய்திருக்கிறது...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சிந்தலக்கட்டையைச் சேர்ந்தவர் வேலாயுத பெருமாள்...

இவர், சொத்து பிரச்சினை காரணமாக தன் மனைவி முத்துமாரி மற்றும் மகன் ராமச்சந்திரனை பிரிந்து கோவில்பட்டியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது...

இந்நிலையில், சொத்து விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் எனக்கூறி வேலாயுத பெருமாளை, அவரின் மனைவியும், மகனும் அழைத்திருக்கின்றனர்...

அதன்படி, குடும்பத்தினர் மூவரும் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் கூடியதில்தான் இந்த விபரீதம்...

மனைவியையும், மகனையும் பார்க்க கையில் அரிவாளுடன் தான் வந்திருக்கிறார் வேலாயுத பெருமாள்...

இந்நிலையில், மூவருக்கிடையேயான சொத்து குறித்தான பேச்சுவார்த்தையின் போது தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியிருக்கிறது...

அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளை கையிலெடுத்த வேலாயுத பெருமாள், மனைவியையும், மகனையும் ஓட ஓட விரட்டி வெட்டியது கூடியிருந்த மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது...

பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உள்ளே புகுந்து தாயையும், மகனையும் பலத்த காயங்களுடன் காப்பாற்றி இருக்கும் நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கின்றனர்...

விசாரணையில், தனது பெயரில் இருந்த 16 சென்ட் நிலத்தை எழுதி தரக்கோரி மகனும் மனைவியும் நச்சரித்ததில், ஆத்திரமடைந்த வேலாயுத பெருமாள் இருவரையும் கொல்ல முயன்றது தெரியவர, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்