பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து...அலறியடித்து ஓடிய ஊழியர்கள்...கோவையில் பேரதிர்ச்சி சம்பவம்

Update: 2024-07-14 07:14 GMT

கோவை மாவட்டம் அன்னூர் அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி என்ற இடத்தில் சட்டவிரோதமாக மூன்று பட்டாசு குடோன் இயங்கி வந்துள்ளது. இந்த குடோன்களில் விதிகளை மீறி அளவுக்கதிகமான பட்டாசுகளையும் குவித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு பட்டாசு குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறின. குடோனில் இருந்த நான்கு ஊழியர்கள், அதிர்ஷ்டவசமாக தப்பித்து ஓடி, உயிர்பிழைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து, குடோனின் உரிமையாளர் கணேசமூர்த்தியிடம், அன்னூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்