கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பள்ளி செல்லும் மலை கிராமத்தை சேர்ந்த சிறார்கள் பரிசலில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.லிங்காபுரம் அருகே காந்த வயல், காந்தையூர், மேலூர், உளியூர் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராம மக்களுக்கு லிங்காபுரத்திலேயே பள்ளிகள் உள்ளது. பவானி ஆற்றில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் லிங்காபுரத்துக்கும் மலைகிராமங்களுக்கும் இடையேயான பாதைகள் தண்ணீரால் மூழ்கியது. இதனையடுத்து, கிராம மக்கள் பரிசலை கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களை லிங்காபுரத்துக்கு அனுப்பி வருகின்றனர். அதன்பின்னர், முழங்கால் அளவு தண்ணீர் உள்ள பாலத்தில் மாணவ, மாணவியர்கள் நடந்து செல்கின்றனர். இந்த தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தால், மோட்டார் படகுகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில், உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.