வலியால் துடித்த கர்ப்பிணி பெண் - கடவுள் போல் காப்பாற்றிய பெண் டாக்ஸி டிரைவர்

Update: 2024-08-28 01:49 GMT

கோவையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு, பெண் டாக்சி ஓட்டுநர் தக்க சமயத்தில் உதவி செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது...

கோவையில் அரசு பேருந்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனை அருகே பேருந்து நிறுத்தப்பட்டது. அப்பெண்ணுக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கியதால், அருகிலிருந்தவர்கள் யாரும் உதவ முன்வராத நிலையில், லதா தேவி என்ற பெண் டாக்ஸி ஓட்டுநர், கர்ப்பிணியை தனது வாகனத்தில் அழைத்துச் சென்றார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து, தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக, லதா தேவி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்