நிற்காமல் கொட்டிய கனமழை - இரவோடு இரவாக மக்களை பார்க்க ஓடிவந்த கலெக்டர், மேயர்

Update: 2024-10-14 05:53 GMT
  • கோவை ஆவாரம்பாளையம் பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்த நிலையில், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி நேரில் பார்வையிட்டார்...
  • பட்டாளத்தம்மன் கோவில் வீதியில் உள்ள பள்ளத்தில் இருந்து வெளியேறிய மழைநீர் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இரவு நேரத்தில் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவு படுத்தினர். பொதுமக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கவும், இப்பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகாமல் இருக்க நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் கிராந்தி குமார்பாடி அறிவுறுத்தியுள்ளார்...
Tags:    

மேலும் செய்திகள்