உலகமே பெரும் பரபரப்பில் இருக்க.. முதல்முறையாக கூட்டாக போர் - ஒத்திகை பார்த்த இந்தியா, ஜெர்மனி

Update: 2024-08-07 09:18 GMT

இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே முதல் முறையாக கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் 8 நாட்கள் கூட்டு போர் பயிற்சி தொடங்கியது. இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் ஆகியோர் தலைமையில் இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்கள் வரும் 14ம் தேதி வரை கோவையில் தங்கி சூலூர் விமானப்படை தளத்தில் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விமான போர் பயிற்சியில் இந்தியாவின் அதிநவீன போர் விமானங்களான தேஜஸ், Su-30MKI, Mig29K மற்றும் பிற நாடுகளின் கனரக போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. இது குறித்து பேசிய, ஜெர்மன் நாட்டின் விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ், இது போன்ற பயிற்சி எந்த உலக நாடுகளுக்கும் எதிரானது அல்ல. மேலும், இந்த கூட்டு போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தவும், விமானப்படையில் தற்போது உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளவும் உதவும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்