கோவையில் ED Raid... "கணக்கில் வராத பணம் உள்ளதா?"

Update: 2023-08-03 15:00 GMT

கோவையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடு உட்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துபாலன் என்பவரது வீட்டில் சோதனை நடத்துவதற்காக, இரண்டு வாகனங்களில் அமலாக்கத்துறையினர் வந்துள்ளனர். துப்பாக்கி ஏந்திய 10க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப். போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முத்துபாலன், அ.தி.மு.க டாஸ்மாக் தொழிற்சங்க மாநில துணை தலைவராக உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்களில் இவரும் ஒருவர் என கூறப்படுகிறது. இதேபோல், அருண் அசோசியேட் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் நிறுவன உரிமையாளர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்