டிவி ரீசார்ஜ் நம்பரை தவறாக சொன்ன 3வது மனைவி... எமனாக மாறிய கொடூர கணவன்..துடிதுடிக்க பயங்கரம்
சூலூர் பூராண்டம்பாளையத்தை சேர்ந்த தர்மராஜ் என்ற கூலி தொழிலாளி உமா என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் வீட்டில் உள்ள டிவியில் படம் தெரியாததால் ரீசார்ஜ் செய்யும்படி கூறி அதற்கான நம்பரை உமா கொடுத்துள்ளார். ஆனால் அந்த நம்பர் தவறாக இருந்ததால் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் மது போதையில் வீட்டிற்கு சென்று மனைவியை சரமாரியாக தாக்கிய நிலையில் உமா உயிரிழந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தர்மராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்