சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியதை, தத்ரூபமாக காட்சிப்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு குவிகிறது. கோவை மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள பள்ளியில், சர்வதேச விண்வெளி தினத்தை ஒட்டி, கண்காட்சி நடைபெற்றது. இதில், ஏவுகணை, லேண்டர், ரோவர் என தங்களது வடிவமைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். குறிப்பாக, சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கியதையும், அதில் இருந்து ரோவர் வெளிவந்ததையும் மாணவர்கள் தத்ரூபமாக காட்சிப் படுத்தியதை, அனைவரும் வியந்து பார்த்தனர்.