"நடவடிக்கை எடுக்கா விட்டால்.." - கொதித்தெழுந்த மக்கள் கொடுத்த வார்னிங்... பரபரத்த கோவை...
கோவையில் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையால் அவதிக்குள்ளான பொதுமக்கள் தங்களது அடையாள அட்டைகளை மீண்டும் அரசிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... குருடம்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், முருகன் என்பவரது நூற்பாலையால் ஏற்படும் அதிக சத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்தும் பஞ்சாயத்து சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கா விட்டால் தங்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை திரும்ப அரசுக்கே ஒப்படைக்க உள்ளதாகவும் அந்த மனுவில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.