அரிய வகை நோயால் சிறகொடிந்த பெண் தேவதை - கண்ணீர் மல்க தந்தை சொன்ன வார்த்தை
சிந்தாமணி புதூரைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை லித்திக்ஷா முதுகெலும்பு தசை சிதைவு என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க 16 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. லித்திக்ஷாவின் பெற்றோர், சுரேஷ்குமார் மற்றும் நித்யாதேவி, தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முதல்வர் ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.