கொடநாடு வழக்கு - குஜராத்தில் சாட்சியங்கள் - "உடனே வேண்டும்.." அதிரடி காட்டிய நீதிபதி

Update: 2023-10-13 14:04 GMT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய செல்போன் உரையாடல் உள்ளிட்ட விவகரங்ளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆய்வகங்களுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொடநாடு வழக்கின் விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பு மற்றும் சிபிசிஐடி தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜரான நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் ஒருவர் மட்டும் ஆஜரானார். அப்போது, இதுவரை 170க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் செல்போன் லோகேஷன், அழைப்புகள் உள்ளிட்ட விவரங்களை வைத்து ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். இதில், உயிரிழந்த கனகராஜின் செல்போன் மற்றும் கால் ஹிஸ்ட்ரிகளை குஜராத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், அதுவர தாமதமாகும் எனவும் அரசு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது, கூறிய நீதிபதி, கோவை மற்றும் குஜராத்தில் உள்ள கொடநாடு வழக்கு தொடர்பான செல்போன் உரையாடல்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்பிக்கும்படியும், பின்பு வழக்கு குறித்து விசாரிக்கலாம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், குஜராத் மற்றும் கோவையில் உள்ள ஆய்வகங்களுக்கு கொடநாடு வழக்கின் செல்போன் பதிவுகளை விரைவில் அனுப்பக்கோரி நினைவூட்டல் கடிதம் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்ட நிலையில், வழக்கு நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்