"விரைவில் பாலம்" இரவு முழுவதும் மக்களோடு தங்கிய அதிகாரிகள் சொன்ன தகவல்.. பரபரப்புக்கு முற்றுபுள்ளி

Update: 2024-08-20 15:38 GMT

மலை கிராமத்தில் தங்கி குறைகளை கேட்டறிந்த வருவாய் துறையினர்

கொடைக்கானல் சின்னூர் காலனி மலை கிராமத்தில், ஆற்றினை கடக்க பாலம் அமைக்கப்பட இருப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சின்னூர் மலை கிராமத்தில், உடல்நல குறைவால் டோலி கட்டி தூக்கி செல்லப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில் வட்டாட்சியர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட மூவர், சின்னூர் காலனி மலைக்கிராமத்திற்கு சென்று ஓர் இரவு தங்கி ஆய்வு செய்தனர். உயிரிழந்த பெண்ணின் 2 குழந்தைகளுக்கு விடுதியில் தங்கி படிக்கவும், அந்த பகுதியில் சாலை மற்றும் பாலங்கள் அமைப்பது குறித்து கோப்புகளை தயாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோட்டாட்சியர் தெரிவித்தார். மழையால் மலைக் கிராமத்திற்கு மருத்துவக்குழு செல்ல முடியாமல் திரும்பிய நிலையில், சின்னூர் மலைக்கிராமத்திற்கு நாளை செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்