கொடைக்கானல் மலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறை.. திகிலில் சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல் மலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறை.. திகிலில் சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழையால், பழனி பிரதான மலைச்சாலையில் பி.எல்.செட் அருகே ராட்சத பாறை உருண்டு சாலையின் நடுவே விழுந்தது. இதனால், அவ்வழியாக போக்குவரத்து தடைபட்டு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர், ஜேசிபி வாகனம் மூலம் பாறை அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் போக்குவரத்து சீரானது.