கிளாம்பாக்கத்தில் தென்மாவட்ட பேருந்துகளை சிறைப்பிடித்த வட மாவட்ட பயணிகள்
திருவண்ணாமலைக்கு போதிய அளவு பேருந்து இல்லாததால், கிளாம்பாக்கத்தில் தென் மாவட்ட பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். வார இறுதி நாள் மற்றும் பௌர்ணமி தினம் என்பதால் திருவண்ணாமலைக்கு செல்வதற்காக, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால், 4 மணி நேரத்திற்கும் மேலாக வந்தவாசி, செஞ்சி, திருவண்ணாமலை வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தென் மாவட்ட பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.