கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த சம்பவம்... நேரில் பார்த்த பதறிய மக்கள்

Update: 2024-05-31 10:28 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் அருகே, பல்வேறு வழித்தடங்கள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்றிரவு கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு கார், கிளாம்பாக்கம் அருகே தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்பகுதியில் சிக்னல் கம்பங்கள், அறிவிப்பு பலகைகள் மற்றும் தடுப்புகளில் போதிய ஒளிரும் ஸ்டிக்கர்கள் வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்