3 மாநிலங்கள் பார்க்க போகும் இயற்கையின் கோர முகம் - ஹை வார்னிங் கொடுத்த வானிலை மையம்

Update: 2024-07-17 06:29 GMT

3 மாநிலங்கள் பார்க்க போகும் இயற்கையின் கோர முகம் - ஹை வார்னிங் கொடுத்த வானிலை மையம்

கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கேரளாவில் இன்று கனமழை பெய்யக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் வரும் 20ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா, ஹவுரா, தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ர மாநிலத்தில் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராய்காட் பகுதியில் சிவப்பு எச்சரிக்கையும், மும்பை, தானே, புனே உள்ளிட்ட பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்