தமிழகத்தை உலுக்கிய 4 பேர் மரணம்.. கேரள ரயில் மோதி ஆற்றில் தூக்கி வீசப்பட்ட உடல் - சோகத்தில் கிராமம்

Update: 2024-11-03 12:33 GMT

சோரனூர் ரயில்வே பாலத்தில் ஒப்பந்த ஊழியர்களாக தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த வள்ளி, அவரது கணவர் லட்சுமணன், வள்ளியின் தம்பி லட்சுமணன் அவரது மனைவி ராணி ஆகிய நால்வரும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலியாகினர். அவர்கள் நால்வரும் சேலம் டி.பெருமாபாளையம் காரைக்காடு மற்றும் அடிமலைபுதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்... ரயில் மோதியதில் பாரதபுலா ஆற்றில் தூக்கி வீசப்பட்ட வள்ளியின் தம்பி லட்சுமணன் உடல் தேடப்பட்டு வருகிறது... உடல் கிடைத்தால் 4 உடல்களையும் கேரளாவில் இருந்து சொந்த ஊரான அடிமலைபுதூர் கிராமத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது... லட்சுமணன் உடல் கிடைக்காவிட்டால் 3 உடல்களை மட்டும் முதலில் தமிழகம் கொண்டு வரப்போவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவத்தால் அவர்கள் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்