கிணற்றுக்குள் கும்மிருட்டில் கதறிய தம்பி..தன் உயிரே போனாலும் பரவாயில்லை- நொடியில் பாய்ந்த அண்ணன்

Update: 2024-07-14 13:24 GMT

கிணற்றுக்குள் கும்மிருட்டில் கதறிய தம்பி

தன் உயிரே போனாலும் பரவாயில்லை

நொடியில் உள்ளே பாய்ந்த அண்ணன்

சிலிர்க்க வைக்கும் சம்பவம்...

20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயதேயான தனது தம்பியை தைரியமாக கிணற்றுக்குள் குதித்து அண்ணன் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

அறம் திரைப்படம் பார்த்திருப்போம்...ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த தன் தங்கையை அண்ணன் மீட்கும் காட்சிகள் கண்கலங்க வைத்திருக்கும்...

எர்ணாகுளம் மாவட்டம்... திருக்காக்கரையைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை முகமது தன் சகோதரி ஃபாத்திமா மற்றும் சகோதரன் ஷௌபானுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்...

பக்கத்தில் கிணறு...குழந்தைகளுக்கு விவரம் தெரியவில்லை...எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான் குழந்தை முகமது...

அதைக் கண்ட மற்ற இரு குழந்தைகளும் அலறினர்... சத்தம் கேட்டு ஓடி வந்த மூத்த அண்ணன் ஃபர்ஹான்...கொஞ்சம் கூட யோசிக்கவில்லை...கிணற்றுக்குள் தம்பி விழுந்து விட்டான் எனத் தெரிந்ததும் தன் உயிரைத் துச்சமென எண்ணி மின்னல் வேகத்தில் கிணற்றுக்குள் குதித்தார்...

உள்ளே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முகம்மதை ஃபர்ஹான் தன் தோள்மீது தூக்கிப் போட்டுக் கொண்டு உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார்...

ஏதோ கிணற்றில் குறைவான அளவே நீர் இருக்கப் போய் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது...

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்...

தம்பியின் உயிரைக் காப்பாற்றிய ஃபர்ஹான் கிணற்றில் குதித்த போது அவரது வலது காலின் முட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது...

ஆனால் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலை இல்லை ஃபர்ஹானுக்கு... தன் தம்பி உயிர் பிழைத்ததே போதும் என கண்ணீர் வர வைத்து விட்டார்...

தம்பிக்காக உயிரையே கொடுக்கத் துணிந்த ஃபர்ஹானை ஊரார் பாராட்டி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்