கரூரில், கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
கரூரில், நேற்று முன்தினம் காலை 8 மணியளவில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு மற்றும் அலுவலகம், தனலட்சுமி மார்பிள்ஸ் டைல்ஸ் ஷோரூம் மற்றும் அதன் உரிமையாளர் பிரகாஷ் வீடு, லக்கி டிரேடர்ஸ் டையிங் யூனிட் நிறுவன அலுவலகம் என 5 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதையொட்டி துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த இந்த சோதனை நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் நிறைவுபெற்றது. முக்கிய ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதையடுத்து, மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டது.