"கார்த்திக் சிதம்பரத்தை காணவில்லை... கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம்" - பரபரப்பு போஸ்டர்

Update: 2024-02-23 05:55 GMT

காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரத்தை காணவில்லை என

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, ஆலங்குடி, திருமயம் உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் கார்த்திக் சிதம்பரத்தை காணவில்லை, என்றும் 'கண்டாவரச் சொல்லுங்க..! கையோடு கூட்டி வாருங்க..! என்ற திரைப்பட பாடல் வரிகளுடனும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், கார்த்திக் சிதம்பரத்தை கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்