#BREAKING || இயற்கை அடித்த அடியால் வழிக்கு வந்த கர்நாடகா.. தமிழகத்திற்கு சீறி பாயும் தண்ணீர்..

Update: 2024-07-16 05:35 GMT

கபிணி, கே ஆர் எஸ் அணைகளிலிருந்து 23800 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டு வருகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் கபினி அணை 99 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவான 19.52 டிஎம்சியில் தற்பொழுது 18.46 டிஎம்சி க்கு நீர் இருப்பு உள்ளது

அணைக்கு நீர்வரத்து 22,840 கன அடியாகவும்

நீர் வெளியேற்றம் 23,333 கன அடியாகவும் உள்ளது.

இதேபோல் மண்டியா மாவட்டத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவான 124.80 அடியிள் தற்போதைய நீர்மட்டம் 107.60 அடியா உள்ளது. அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து993 கன அடியாகவும் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீர் 500 கன அடியாகவும் உள்ளது.

இதன் மூலம் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 23 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த தண்ணீர் திறப்பு வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் கனமழை காரணமாக

தென்கனரா, வடகனரா, உடுப்பி, குடகு ,ஷிமோகா, ஹாசன் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்