முடியாது என அடம் பிடிக்கும் கர்நாடகா.. நெத்தியடி அடிக்க தயாராகும் தமிழ்நாடு

Update: 2024-07-16 03:03 GMT

காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது.

கர்நாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளார். இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்