அதிகாரிகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை தலையீடுநீதிபதி போட்ட பரபர உத்தரவு
அதிகாரிகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை தலையீடு
நீதிபதி போட்ட பரபர உத்தரவு
காரைக்காலில், கோயில் நில மோசடியில் கைதான துணை ஆட்சியர் ஜான்சனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோவில்பத்து கிராமத்தில் உள்ள பார்வதீஸ்வர சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து ஒரு கும்பல் மனைகளாக விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இடைத்தரகர் சிவராமன், போலி ஆவணங்கள் தயார் செய்த நில அளவையர் ரேணுகாதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, ஜான்சனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வரதராஜன், ஜான்சனை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார். இதனிடையை ஜான்சனை தற்காலிக பணி நீக்கம் செய்ய புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நில மோசடியில், அரசு அதிகாரிகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை தலையீடு இருப்பதால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.