பீச்சில் காணமல் போன பெற்றோர்... தனியாய் நின்று கதறிய குழந்தையை தூக்கிக்கொண்டு போராடிய போலீஸ்
காரைக்கால் கடற்கரையில் பெற்றோரை பிரிந்து தவித்த சிறுவனை 2 மணி நேரம் போராடி பெற்றோரிடம் மீண்டும் போலீசார் ஒப்படைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
நேற்று விடுமுறை தினம் என்பதால் காரைக்கால் கடற்கரையில் பெருந்திரளான மக்கள் குழுமினர்.... குடும்பம் குடும்பாக கடலில் குளித்து உற்சாகம் அடைந்தனர்.
திரும்பும் திசையெல்லாம் மக்கள் மிகுந்திருக்க தன்னந்தனியாக நின்ற மூன்று வயது சிறுவன், அழுது தவித்துக் கொண்டிருந்தான்.
சிறுவன் தேம்பி தேம்பி அழுததைப் பார்த்து பதறிப்போன போலீசார், உடனடியாக சிறுவனைத் தூக்கி, யார் தம்பி நீ... உன் பேரு என்ன எனக் கேட்க, அழுகை அதிகமானது.
ஸ்மால் ப்ரீத் () போலீஸ் பேசுவது...சிறுவன் அழுவது.