கள்ளக்காதலனுடன் இருந்ததை கண்டதால் கணவனுக்கு நேர்ந்த கொடூரம் -குமரியில் அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மாறாங்கோணம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குமாரபுரம் பகுதியை சேர்ந்த மெர்லின்சீத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளநிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரீகன்ஜோய் என்ற வாலிபருடன் மெர்லின் சீத்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில் கள்ளக்காதலனுடன் காதல் மனைவி பைக்கில் செல்வதை பார்த்த ராஜேந்திரன் அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மெர்லின்சீத்தா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தலைமறைவாக இருந்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.