2 வருசமா குழந்தையை சீரழித்த தந்தை.. தாயை பார்த்ததும் நடுங்கிய சிறுமி உடல் - குமரியில் அதிர்ச்சி

Update: 2024-08-16 16:23 GMT

2 ஆண்டுகளாக 10 வயது மகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த ராணுவ வீரரான தந்தையை போலீசார் போக்சோவின் கீழ் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு இந்த அவலம் நேர்ந்திருக்கிறது. எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் தந்தை விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய நிலையில், அவரின் மகள் பயத்தில் உடல் நடுக்கத்துடன் இருந்திருக்கிறார். இந்நிலையில், சிறுமியை அழைத்து அவரின் தாய் விசாரணை செய்ததில் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடனடியாக இது குறித்து சிறுமியின் தாய் போலீசில் புகாரளித்த நிலையில், சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்