பகவதி அம்மன் கோயிலுக்குள் சலசலவென ஓடிய மழை வெள்ளம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக அகஸ்தீஸ்வரம் பகுதியில் 16 சென்டிமீட்டர் மழை பதிவானது. இந்த மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலை நோக்கி ஆறு போல பாய்ந்தது. இதேபோல சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி கோயிலை சுற்றி உள்ள சாலையிலும் மழைநீர் ஆறு போல சென்றது. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மாலையில் மழை ஓய்ந்தததை அடுத்து வெள்ளத்தின் அளவும் படிப்படியாக குறைந்தது.