"வயநாடு போல் குமரியில் நிலச்சரிவு?" அலறி அடித்து ஓடி வந்த மக்கள் | Kanniyakumari

Update: 2024-08-14 14:14 GMT

மார்த்தாண்டம் செறுகோல் ஊராட்சிக்கு உட்பட்ட கிழங்குவிளை பொற்றை மலைப்பகுதி உள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள புலையன் விளை, கிழங்குவிளை, கொழிஞ்சிவிளை, காவுவிளை, கடமனங்குழிவிளை, மேடவிளை கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு மலைப் பகுதியில் இருந்து டாரஸ் லாரிகளில் கல், மண் கொண்டுச் செல்வதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மலையை உடைக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டிய மக்கள், அடுத்த மழை பெய்யும் போது மலை மேலிருக்கும் பாறைகள் உருண்டு வீடுகளில் விழ வாய்ப்பிருக்கிறது, வயநாடு போல் குமரியில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவித்தனர். மண் அள்ளப்படுவதை மக்கள் தடுத்து நிறுத்தியதை அறிந்து வந்த அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்