அண்டாவில் துடிதுடித்து இறந்த பிஞ்சு.. இப்படியொரு கொடூர மரணமா?

Update: 2024-07-27 09:11 GMT

குமரி மாவட்டம், திருவட்டார் அருகே அண்டாவில் இருந்த தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கல்லங்குழி பகுதியை சேர்ந்த லியோ பிரபின்- நிம்மி தம்பதிக்கு கெவின் சுமித் என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது

கருத்து வேறுபாடு காரணமாக, நிம்மி, கணவரை பிரிந்து, குழந்தையுடன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டின் பின்பக்கம் விளையாடி கொண்டிருந்த கெவின் சுமித்தை காணவில்லை என்று பாட்டி தேடியபோது, அருகில் உள்ள அண்டாவில் மூழ்கிய நிலையில் குழந்தை கிடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

குழந்தையை பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவட்டார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்