கண்ணீர் சிந்தி கனிமொழி எம்.பி-யிடம் சொன்ன வார்த்தை.. மனதை கலங்க வைத்த பாட்டியின் செயல்

Update: 2024-09-12 05:04 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில், ஆதி திராவிடர் நல குடியிருப்பில் கட்டப்பட்ட புதிய வீடுகள் பயனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில், புதிய வீடுகள் கட்டிதர நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில், இரண்டாம் கட்டமாக 11 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில், கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது, மூதாட்டி ஒருவர் கனிமொழியை நோக்கி கரங்கள் கூப்பி நன்றி தெரிவித்தது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்